Designed by Iniyas LTD
யாழில் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் ரத்து…
யாழ்மாவட்டத்தில் மீண்டும் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் அதிகாரிகளதும் விடுமுறைகள் இன்று முதல் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.
இத்தனை வடமாகாண மூத்த பொலிஸ்மா காரியாலயம் தெரிவித்துள்ளது.
யாழ் மாவட்டத்தில் இந்த மாதம் வாள்வெட்டுக்குள், கொள்ளைச் சம்பவங்கள், கொலைகள் என தொடர்ச்சியாக இடம்பெற்ற நிலையில், குற்றங்களில் ஈடுபட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று மீண்டும் வன்முறைகள் இடம்பெறாதவாறு நிலமையைக் ட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ள தாக தெரிவிக்கபட்டுள்ளமை குரிப்பிடத்தக்கது.