Designed by Iniyas LTD
440 பைகளில் பொதி செய்யப்பட்டுள்ள மனித எலும்புகூடுகள்..
மன்னார் ‘சதொச’ வளாகத்தில் நேற்றையதினமும் 47வது நாளாக முன்னெடுகப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்டு அடையாளமிடப்பட்டிருந்த மனித எலும்புக் கூடுகள், மற்றும் மண்டை ஓடுகளை வெளியேற்றும் செயற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றது.
குறித்த சதோச வளாகத்திற்கு அருகாமையிலுள்ள நடை பாதையில் ஐந்து அடிக்கு கீழ் அகழ்வை விரிவுபடுத்திய இடத்திலேயும் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.
அங்கும் இடமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், . குறித்த வளாகத்தில் இரு வேறு பகுதிகளில் வித்தியாசமான நிலையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
எனினும் மையப்பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படவில்லை எனவும் வளாகத்தின் நுழைவு பகுதிகளில் உள்ள மனித எச்சங்கள் தொடர்பாகவே கவனம் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வரை குறித்த வளாகத்தில் இருந்து 66 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், 56 மனித எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த மனித எச்சங்கள் 440 பைகளில் இலக்கங்கள் இடப்பட்டு பொதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..