Designed by Iniyas LTD
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்…
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் 2 நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் எனவும் ,இதன்போது அரசாங்கத்தின் உயர் மட்டத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோருடன் சந்திப்புகளை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது அவர் இலங்கை பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் குறிபிடப்பட்டுள்ளதோடு, கொழும்புக்கு வெளியிலும் அவர் பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான ‘விரிவான பங்களிப்பு’ மேலும் வலுப்பெறுவதற்கு இந்த விஜயம் உறுதுணையாக அமையும் என எதிர்பார்ப்பதாக ஜப்பானிய தூதரகம் அறிவித்துள்ளது.
இதேவேளை ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சரொருவர் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.