Designed by Iniyas LTD
நவோதயா கிருஷ்ணா கொலை சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது…
கொழும்பு மாநகரசபை உறுப்பினர் நவோதயா கிருஷ்ணா கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.
கிருஷ்ணாவை கொலை செய்வதற்காக உளவு பார்த்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இத்தகவலை பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்தார்.
குறித்த சந்தேகநபர் புளூமென்டல் பகுதியைச் சேர்ந்த 33 வயதான அஞ்சன மிதுன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.