Designed by Iniyas LTD
உயர் மட்ட இராஜதந்திர வட்டாரங்களின் ஊடாக இலங்கையிடம் கேள்வி எழுப்பியுள்ள சீனா…
சீனாவினால் வடக்கில் முன்னெடுக்கப்படவிருந்த வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதன் பின்னணியில் இந்தியாவின் தலையீடு இருந்ததா? என இலங்கை அரசாங்கத்திடம் சீனா கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா இவ்வாறு இலங்கை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளதாகஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கில் 40 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தைச் சீனா முன்னெடுக்கவிருந்த நிலையில் குறித்த நடவடிக்கைக்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.
இதன் காரணமாக குறித்த திட்டத்தில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதனால், அரசாங்கம் இன்னமும் இது தொடர்பில் முடிவெடுக்காத நிலை காணப்படுகிறது.
இந்த நிலையிலேயே குறித்த வீடமைப்புத் திட்டத்துக்கு எதிராக வடக்கில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருந்ததா? என சீனா தனது உயர் மட்ட இராஜதந்திர வட்டாரங்களின் ஊடாக அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.