Designed by Iniyas LTD
பெண்களுக்கெதிரான குற்றவாளிகளிற்கு விரைவில் தண்டனை வழங்கவேண்டுமென வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்டம்…
வடமாகாணத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துச் செல்கின்ற நிலையில்,அவை தொடர்பான சட்ட நடவடிக்கைகளும் மந்த கதியிலேயே நடைபெறுகின்றது.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் துரித கதியில் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி யாழ்.மாவட்ட அரசசார்பற்ற அமைப்புக்களின் இணையம் ஆர்ப்பாட்டமொன்றை இன்று நடத்தியுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 10.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தின் முன்னால் நடாத்தப்பட்டிருந்தது.
