தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜப்பானில்  கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் புயல்..

ஜப்பானில்  கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் புயல் நேற்று தாக்கியயுள்ளது.
இந்த புயல் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இந்த புயலுக்கு “ஜெபி” என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஜப்பானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள டோகுஷிமா பகுதியில் நேற்று மதியம் 12 மணிக்கு புயல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்குச் செல்லும் 800 விமானங்களும் உடனடியாக ரத்து செய்யப்பட்டு நிப்பான் மற்றும் ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் 600 விமானங்களை ரத்து செய்தது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
ஒஸாகா, க்யோட்டோ, நாரா, ஹியோகோ, காகாவா, எஹிமி, வகயாமா, ஜிஃபூ, ஐசூ ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறு அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இந்த நிலையில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக ஜப்பான் அரசு செய்தித்தொடர்பாளர் யோஷிஹிடே சுகா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...