Designed by Iniyas LTD
திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நிலநடுக்கம்….
திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்றிரவு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இன்று நள்ளிரவு சுமார் 12.35 அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அதோடு நிலாவெளி, உவர்மலை, மனையாவெளி, வீரநகர், பிரதான வீதி, தம்பலகாமம், ஈச்சலம்பற்று, மூதூர், கட்டைப்பறிச்சான், திருக்கடலூர் உள்ளிட்ட பல இடங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் சில இடங்களில் அச்சத்துடன் தங்கள் வீடுகளை விட்டும் வௌியில் ஓடிசென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை குறித்த நிலநடுக்கம் 2 – 3 ரிக்டர் அளவில் உணரப்பட்டுள்ளதாகவும், சுனாமிக்கான அச்சம் ஏதும் இல்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.