தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அனுராதபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கைதிகளில் ஒருவர் ஏற்கெனவே புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலைச் செய்யப்பட்டவர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர் ஏற்கெனவே புனர்வாழ்வளிக்கப்பட்டு  விடுதலைச் செய்யப்பட்டவரென தெரியவந்துள்ளது.
ஐயன் என்றழைக்கப்படும் சூரியகாந்தி ஜெயசந்திரன் என்பவரே விடுவிக்கபப்ட்ட நிலையில் மீளவும் கைதுசெய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக  அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜெயசந்திரனின் தாயார்  யாழ்.ஊடக அமையத்தில்  தெரிவித்தபோது
தனது மகன், கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும், 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் திகதியன்று புனர்வாழ்வழிக்கப்பட்டு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்பின்   அடிக்கடி தங்களுடைய வீட்டுக்கு வந்து மகனிடம் விசாரணை செய்த இராணுவத்தினர் பின்னர்  2010ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதியன்று தனது மகனை காரணமின்றி ​கைதுசெய்யததாகவும் கூறியுள்ளார்.
அன்றைய தினம் தனது மகனுக்கு நிச்சயதார்த்த ஏற்பாடு இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே, மகன் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 அதன்பின்  தனது மகன், பூசா, கொழும்பிலுள்ள 4ஆம் மாடி ஆகியவற்றுக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று இறுதியில் அநுராதபுரம் சிறைச்சாலையில் அடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தானும் பலமுறை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது மகனுக்கு எதிராக 2 வழக்குகள் தாக்கல்செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஒன்றில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றைய வழக்கு கிடப்பில் போடப்படப்பட்டு இழுத்தடிக்கப்படுவதாகவும் அவர்  இதன்போது கவலை வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...