தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து   இராணுவத்தை விடுவிக்கும் நோக்குடன்,  ஜனாதிபதி அமெரிக்கா பயணம்….

போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கை  இராணுவத்தை விடுவிக்கும் நோக்குடன்,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை அமெரிக்காவுக்குப்  செல்லவுள்ளார்.

ஐ.நா பொதுச்சபையின் 73 ஆவது அமர்வில் கலந்து கொள்வதற்காக,  அவர்  நாளை  நியூயோர்க் செல்லவுள்ளார்.

அங்கு எதிர்வரும் 25ஆம் திகதி  மாலை ஐ.நா பொதுச்சபையில் அவர் உரை நிகழ்த்தவுள்ளார்.

இதன் போது,  படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து  அவர்களை விடுவிப்பதற்கான யோசனைகளை  ஜனாதிபதி முன்வைக்கப் போவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தமை நினைவில்கொள்ளத்தக்கது.

இந்நிலையில் நியூயோர்க்கிற்கான இந்தப் பயணத்தின் போது,   உலகத் தலைவர்கள் சிலருடன்  பேச்சுக்களை நடத்தவும்  ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஐ,நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ், கொமன்வெல்த் அமைப்பின் செயலாளர் நாயகம் பற்றீசியா ஸ்கொட்லன்ட், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் உள்ளிட்டோரையும் ஜனதாபதி  சந்தித்துப் பேச   திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிபிடத்தக்கது.

Comments
Loading...