அப்போது வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பு முன்னைவிட மேம்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். ஆகவே, அங்கு மத்திய ஆயுதப் படைகளின் எண்ணிக்கையை குறைக்கலாமா என்பது பற்றி ஆய்வு செய்யுமாறு சம்பந்தப்பட்ட முதலமைச்சர்களை ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார்.
மேலும் மிசோரம், திரிபுரா, அசாமின் பெரும்பாலான பகுதிகள், மேகாலயா, மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தீவிரவாத அச்சுறுத்தல் பெருமளவு குறைந்திருப்பதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.