இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய விசாரணை அமைப்பை இலங்கையே உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய வரைவு தீர்மானம் ஒன்றை அமெரிக்கா கொண்டு வந்தது. இதற்கு இலங்கை ஆதரவு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அதில் அமெரிக்கா சில திருத்தங்களை செய்திருக்கிறது.
சர்வதேச நீதிபதிகள் என்பதற்கு பதிலாக, காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் என்று மாற்றப்பட்டிருக்கிறது. இதுபோன்று மேலும் சில அம்சங்களில் அமெரிக்கா திருத்தம் செய்துள்ளது.
இந்த தீர்மானத்தின் மீது இன்று உறுப்பு நாடுகளிடம் கருத்துக் கேட்கப்படுகிறது. இதன் மீதும் இலங்கைக்கு ஆதரவான நாடுகள் திருத்தம் செய்ய வலியுறுத்தும் என்று கூறப்படுகிறது.அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் அது அமெரிக்காவுக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தும் என்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இறுதியாக இலங்கை போர்க்குற்றம் தொடர்பான தீர்மானம் ஐ.நா மனித உரிமை அவையில் வரும் 30-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.