அதேவேளை இலங்கையில் 77 வீதமான கருத்தரிப்புகள் எதிர்பாராத கருத்தரிப்புகள் என்று சம்பந்தப்பட்டவர்களால் கருதப்படுவதாகவும் தமது ஆய்வுகள் கூறுவதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது குறித்து கிழக்கு மாகாண சமூக நல மருத்துவ நிபுணரான டாக்டர் எஸ். அருள்குமரன் கூறுகையில், கருக்கலைப்புக்கள் 1000 என்ற எண்ணிக்கையில் இருந்து தற்போது 650ஆக குறைந்துள்ளதாக கூறுகிறார்.
மேலும் கருக்கலைப்புகள் மருத்துவ காரணங்களுக்காக மாத்திரமே அரசாங்க மருத்துவமனைகளில் நடப்பதாகவும், ஆனாலும் சில சட்டவிரோத நிலையங்கள் இதற்காக செயற்படுவதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.