உலகிலேயே அதிக வயதான மரம் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு..

உலகிலேயே அதிக வயதான மரம் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா வனப்பகுதியில் உள்ள மரங்களை புவியியல் மற்றும் தாவரவியல் ஆய்வாளர் ஆய்வு செய்தனர்.

இதன்போது அங்கிருந்த சதுப்பு நிலத்தில் நின்றிருந்த 80 அடி உயரமுள்ள மரத்தை கடந்த 2017ம் ஆண்டு ஆய்வு செய்தனர்.

மேலும் மரத்தின் தண்டுப் பகுதியில் காணப்படும் வளையங்களை வைத்து நடத்திய சோதனையில் அந்த மரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மரத்தின் சரியான வயதை அறிய கார்பன் டேட்டிங் என்ற ஆய்வுக்கு உட்படுத்திய போது குறிப்பிட்ட மரம் 2 ஆயிரத்து 624 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த மரம் உலகின் பழமையான மரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கார்மரம்
Comments (0)
Add Comment