காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் தார்த்புரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக நேற்றுமுன்தினம் இரவு தெரியவந்தது. இதனையடுத்து இந்திய பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது. இதில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதேபோல் புல்வாமா மாவட்டம் கடூரா கிராமத்திலும் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை குறி வைத்து நேற்றுமுன்தினம் இரவு கடும் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் தீவிரவாதிகள் மீதான தாக்குதல் கைவிடப்பட்டது. நேற்று காலை பாதுகாப்பு படையினரின் தாக்குதல் மீண்டும் தொடங்கியது.

இதில் ஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த பிலால் அகமது பாத் என்ற உள்ளூர் தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. துப்பாக்கி சூடு நடந்த இடத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைய முயன்றதால் பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகள் வீசி அவர்களை கலைத்தனர்.

kaduraaஇந்தியாஇராணுவம்காஷ்மீர்கொலைதீவிரவாதிகள்பாக்கிஸ்தான்புல்வாமா
Comments (0)
Add Comment