இந்நிலையில் முஃப்தி முகமது சயீத்துக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதால், அவரது பதவிக்கு, மகள் மெகபூபா தேர்வு செய்யப்படுவார் என்று மக்கள் ஜனநாயக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சயீத் புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடுமையான காய்ச்சல் மற்றும் நெஞ்சு வலி காரணமாக கடந்த 24 ஆம் தேதி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முஃப்தி முகமது சயீத்.