தீவிரவாத அச்சத்தில் இருந்து உலகை திசை திருப்பியுள்ளது ஜிகா!..

தீவிரவாதம் தொடர்பான அச்சத்தில் இருந்து உலகையே திசைதிருப்பி உள்ளது ‘ஜிகா வைரஸ்’. ஏடிஸ் வகை கொசுக்களால் பரவக்கூடிய இந்த ஜிகா வைரஸ் தொற்றுக்கு இதுவரை முறையான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆரம்பக்கட்டமாக பிரேசிலில் இருந்து தென் அமெரிக்க நாடுகளுக்கு பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் தற்போது ஆசிய நாடுகளிலும் வேகமாக பரவிவருகிறது. இந்த நிலையில் தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில், ஜிகா வைரஸ் தாக்கி 3 பேர் பலியாகி இருப்பதாக அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து அந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ தேசிய தொலைக்காட்சியில் பேசுகையில் ‘‘வெனிசுலாவில் கடந்த நவம்பர் முதல் தற்போது வரை 5 ஆயிரத்து 221 பேரை ஜிகா வைரஸ் தாக்கி இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.

அதில் 319 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. தற்போது துரதிர்ஷ்டவசமாக ஜிகா வைரஸ் தாக்கி 3 பேர் உயிரிழந்து உள்ளனர்’’ என கூறினார். மேலும் ஜிகா வைரஸ் தாக்கிய 68 பேர் அவசர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்துகள் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.

அச்சம்உலகம்ஏடிஸ்கொசுஜிகாதிசைதிருப்பல்தீவிரவாதம்தொற்றுபலிவைரஸ்
Comments (0)
Add Comment