கன மழை காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக துபாய், அபுதாபி நகர்களில் பள்ளிகள் மூடப்பட்டன. பல வீடுகள் மழை நீரில் மூழ்கியுள்ளன. சாலையில் ஆறு போல் ஓடும் வெள்ள நீரில் கார்கள் மிதக்கின்றன. மரங்கள் வேரோடு சாய்ந்து வருவதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மழையினால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதாலும், நெட்வொர்க் பாதிப்பு காரணமாகவும் அபுதாபி பங்குச்சந்தைகள் மூடப்பட்டன. பல அலுவலகங்களும் மழையினால் மூடப்பட்டுள்ளன.