கடந்த 2 மாதங்களில், 3வது முறையாக, அந்நாட்டில் புயல் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. மெகி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், தைவானின் கிழக்குப் பகுதி நகரமான ஹூலியானில் கரையை கடந்தது. இதனால், பல இடங்களில் பலத்த காற்று மற்றும் மழை சுழன்றடித்தது. சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால், பேருந்து, ரயில் போக்குவரத்து முடங்கின.
ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால், மக்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வரப்பட்டனர். இதுவரை மெகி புயலில் சிக்கி, 4 பேர் உயிரிழந்துள்ளனர். 160க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 நாளில் மட்டும், மெகி புயல் காரணமாக, யிலான், ஹூலியான் உள்ளிட்ட பகுதிகளில் 1000 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது