இதுகுறித்து காவல் துறைத் தலைவர் எஸ்.பி. பிக்ரம் சிங் தாப்பா கூறியதாவது: ஜோர்பட்டியில் உள்ள ஆகாஷ் தீப் உறைவிடப் பள்ளி மற்றும் மனக்கமனா மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன.
மேலும், காத்மாண்டிலுள்ள ஐந்து பள்ளிகளிலிருந்து வெடிக்காத குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றைச் செயலிழக்கச் செய்யும் பணிகளில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்கள் அந்தப் பள்ளி வளாகத்திலிருந்து கைப்பற்றப்பட்டன. இந்த சிலிண்டர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையதாகக் கருதப்படும் இருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.