பாகிஸ்தான் ஆக்ரமிப்பில் இருக்கும் பஞ்சாப்பின் குஜ்ரன்வாலா நகரத்தில் உள்ள காவல்நிலையத்தில் 06/2016 என்ற பதிவெண்ணுடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் மீது, கொலை, கொலை முயற்சி, பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகர் நாஸர் கானிடம் இந்திய அதிகாரி அஜித் அளித்த தகவல்களின் அடிப்படையில், பதான்கோட் தாக்குதல் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தும் வகையில், இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.