சுவிட்சர்லாந்தில் உள்ள மக்கள் பொருளாதார சரிவில் இருந்து மீண்டு பணக்காரர்களாக வளர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுவிஸின் சொத்து மதிப்பு கடந்த 2007ம் ஆண்டில் இருந்ததை விட 68 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும், தற்போது ஒரு குடிமகனின் சராசரி சொத்து மதிப்பு 3,94,900 யூரோக்களாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதன்மூலம் ஐரோப்பிய நாடுகளில், சுவிஸ் இரண்டாவது பணக்கார நாடாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2013ம் ஆண்டு முதல் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார சரிவில் இருந்து மீண்டு வந்துள்ளது. மேலும் ஜேர்மனி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளும் பொருளாதார விகிதத்தில் முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.