இது 8.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவிசரிதவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நில அதிர்வு காரணமாக 8 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நில அதிர்வின் மையப்பகுதி 33 கிலோ மீற்றர் (21 மைல்) ஆழத்தில் காணப்பட்டுள்ளதுடன், பிஜிஜியாபின் தென்மேற்கில் இருந்து 123 கிலோ மீற்றர் (76 மைல்) தொலைவில் காணப்பட்டுள்ளது.அதற்கமைய, Ecuador, Nicaragua, Panama, Guatemala, Honduras, Mexico, El Salvador, மற்றும் Costa Rica ஆகிய நாடுகளுக்கு ஆபத்தான சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை நில அதிர்வு ஏற்பட்ட பிறகு மெக்சிகோவில் உள்ள மக்கள் தெருக்களுக்கு ஓடி சென்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.