மேகி நூடுல்ஸ் நடித்த திரையுலக நட்சத்திரங்களுக்கும் வழக்கு பதியுமாறு உத்தரவு

இந்தியாவில் மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்ததற்காக, பிரீத்தி ஜிந்தா, மாதுரி தீட்சித் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு, காவல்துறைக்கு பீகாரின் முசாபர்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் மேகி நூடுல்சில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு வேதிப்பொருள் கலக்கப்பட்டிருந்தது கடந்த வாரம் கண்டறியபட்டது. இ‌தையடுத்து, அதை சந்தைப்படுத்தும் நோக்கில் விளம்பரப்படங்களில் நடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்து வந்தன.

இந்நிலையில், பீகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றம், அமிதாப்பச்சன், மாதுரி தீட்சித், பிரீத்திஜிந்தா மற்றும் நெஸ்ட்லே நிறுவன அதிகாரிகள் ஆகியோர் மீது வழக்கு பதியுமாறு காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே, மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுக்களில் அளவுக்கு அதிகமாக ரசாயணம் கலக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து,‌ நாடு முழுவதும் அவற்றின் மாதிரிகளை சோதனையிடும் பணி தொடங்கி இருக்கிறது.

அமிதாப் பச்சன்இந்தியாஉத்தரவுநீதிமன்றம்மேகி நூடுல்ஸ்வழக்குவிளம்பரம்
Comments (0)
Add Comment