மேலும் வடக்கு பகுதிக்கு சென்ற அவரிடம், அந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தை விலக்கிக்கொள்ள அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது, வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை சந்தித்த அவர், வடக்கு கிழக்கில் உள்ள சிறுபான்மையின மக்களின் நலனில் அமெரிக்க அதிபர் ஒபாமா அக்கறை கொண்டுள்ளார் என்று தெரிவித்தார். பிரதமர் ரணிலையும் அவர் சந்தித்துப் பேச இருக்கிறார்.