அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசென்ஷன் தீவில் நிலநடுக்கம்

அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசென்ஷன் தீவில் ரிக்டர் அளவில் 7.4 என நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அசென்சன் தீவின் வடமேற்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

ஆப்பிரிக்க நாட்டு கடலோரப் பகுதியில் இருந்து சுமார் 1600 கிலோமீட்டர் தூரத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசென்ஷன் தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் பல எரிமலைகள் அமைந்துள்ளன. அசென்ஷன் தீவின் வடமேற்கே சுமார் 975 கிலோமீட்டர் தூரத்தில், சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.4ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை இல்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அசென்ஷன்அட்லாண்டிக்தீவுநிலநடுக்கம்பதிவுபெருங்கடல்
Comments (0)
Add Comment