அணுசக்தி சப்ளை நாடுகள் குழுமத்தில் பலத்த தகுதிகள் பாகிஸ்தானுக்குண்டு – சர்தாஜ் அஜிஸ்

அணுசக்தி சப்ளை நாடுகள் குழுமத்தில் இடம்பெறுவதற்கான பலத்த தகுதிகள் தங்கள் நாட்டுக்கு உள்ளதாக பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் கூறியுள்ளார்.  அணுசக்தி சப்ளை நாடுகள் குழுமத்தில் இடம்பெறுவதற்கான பலத்த தகுதிகள் தங்கள் நாட்டுக்கு உள்ளதாக பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் கூறியுள்ளார்.

 இதுதொடர்பாக, அந்நாட்டின் பிரபல ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள சர்தாஜ் அஜிஸ், அணுசக்தி சப்ளை நாடுகள் குழுமத்தில் இந்தியாவுக்கு இடம் கிடைத்தால் அந்த அமைப்பில் இடம்பெறுவதற்கு இந்தியாவைவிட அதிகமான தகுதிகள் கொண்ட பாகிஸ்தானுக்கும் இடம் கிடைக்காமல் போகாது என குறிப்பிட்டுள்ளார்.  ஏற்கனவே இந்த குழுமத்தில் உள்ள நாடுகள் சீரான அளவுகோலை பயன்படுத்தி பரிசீலித்தால் அணுசக்தி சப்ளை நாடுகள் குழுமத்தில் இடம்பெற இந்தியாவைவிட பாகிஸ்தானுக்கு அதிகமான தகுதிகள் உண்டு என்பது தெளிவாகும்.

முதலில் இந்த குழுமத்தில் சேர இந்தியா விண்ணப்பிக்கட்டும் என்று நாங்கள் காத்திருந்தோம். இதற்காக இந்தியா விண்ணப்பித்ததும் நாங்களும் விண்ணப்பிக்க கடந்த மூன்றுமாதங்களாக தயார் நிலையில் இருந்து வருகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அணுசக்திஆலோசகர்குழுமம்சப்ளைசர்தாஜ் அஜிஸ்தகுதிபாக்கிஸ்தான்பாதுகாப்பு
Comments (0)
Add Comment