அதிபர் சிறிசேனவின் மூத்த ஆலோசகராக டி.எம் ஜயரத்ன நியமனம்

இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சியில் இறுதி பகுதியில் பிரதமராக இருந்த டி.எம். ஜயரத்னவுக்கு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் சிறப்பு பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபரின் மூத்த ஆலோசகராக முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் அலுவலகத்தில் மைத்திரிபால சிறிசேனவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ராஜபக்சே ஆட்சியின்போது இலங்கைக்கு கொண்டு வந்த 260 கிலோ ஹெரோயின் போதை பொருள் வழக்கில் முன்னாள் பிரதமர் ஜயரத்னவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைசிறப்பு பதவிடி.எம் ஜயரத்னநியமனம்மைத்திரிபால சிறிசேனராஜபக்சேவிசாரணைகள்
Comments (0)
Add Comment