ஐக்கிய நாடுகளின் பொது சபை மாநாடு இந்த மாதம் 30ஆம் திகதி நியுயோர்க்கில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார். இதன் போது அவர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவையும் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு ஆதரவான அமெரிக்காவின் பிரேரணை எதிர்வரும் 24ம் திகதி முன்வைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் உள்நாட்டு பொறிமுறைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த பிரேரணை முன்வைக்கப்படவிருப்பதாக அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஸ்வால் தெரிவித்திருந்தார்.
மேலும் இதன் அடிப்படையில் எதிர்வரும் 24ம் திகதி இந்த பிரேரணை மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.