அநாதைகளாக இருந்த இரு ஆண் பிள்ளைகள் மீட்பு

மாத்தளை பாபர் தோட்டம் பகுதியில் இரண்டு ஆண் பிள்ளைகள் உணவின்றி வீடொன்றில் இருப்பதாக கிராம சேவகர் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்தே சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மூன்று மற்றும் நான்கு வயதான இந்த சிறுவர்களை தந்தை கவனிப்பதில்லை எனவும் தாய் இரண்டு வயதான பிள்ளை அழைத்து கொண்டு அதிகாலையிலேயே பிச்சை எடுப்பதற்காக சென்று விடுவதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனால் மாலையில் தாய் வீட்டுக்கு வரும் வரை இந்த சிறுவர்களுக்கு தண்ணீர் கூட கிடைப்பதில்லை என தெரியவருகிறது. ஆடை அணியாது காணப்பட்ட இந்த சிறுவர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பொலிஸார் அவர்களை நீராட்டிஇ உணவு மற்றும் உடைகளை வழங்கியுள்ளனர். இதனையடுத்து மாத்தளை நீதவான் சம்பத் கமகே முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சிறுவர்களைஇ மாத்தளை கவட்டயமுன பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

அடுத்தேஆண்இரண்டுஇருப்பதாகஉணவின்றிஒருவர்கிராமசிறுவர்கள்சேவகர்தகவலைதோட்டம்பகுதியில்பாபர்பிள்ளைகள்மாத்தளைமீட்கப்பட்டுள்ளனர்.வழங்கியவீடொன்றில்
Comments (0)
Add Comment