அனுருத்த ரத்வத்தவின் பேத்தி மஹிந்தைக்கு மருமகளாகின்றார்

மலைநாட்டு கண்டிய சிங்களப் பெண்ணை மருகளாக்கிக் கொள்ள ஜனாதிபதி மகிந்தவும் அவரது மனைவியான ஷிரந்தி ராஜபக்சவும் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. கீழ் நாட்டு சிங்களவர்களான மெதமுலன ராஜபக்ச பரம்பரையினருக்கு கண்டிய சிங்களவர்களுடன் எந்த உறவு முறை தொடர்புகளும் இல்லை.

இதனால், தமது மகன் யோஷித ராஜபக்சவுக்கு கண்டிய சிங்கள பெண்ணை மணமுடிக்க ஜனாதிபதியின் குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர். முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரான ஜெனரல் அனுருத்த ரத்வத்தவின் பேத்தியையே, ராஜபக்ச குடும்பத்தினர் மருமகளாக்கிக் கொள்ளப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுருத்த ரத்வத்தவின் புதல்வர் லொஹான் ரத்வத்த மற்றும் அமந்தா டயஸ் ரத்வத்த ஆகியோரின் புதல்வியான லோஹான்னா ரத்வத்தவையே யோஷிதவுக்கு திருமணம் செய்து வைக்க உள்ளனர். ரத்வத்த பரம்பரையினர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தாயான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் உறவினர்களாவர். அனுருத்த ரத்வத்த சிறிமாவோ பண்டாரநாயக்கவின் சகோதரர் என்பதுடன் சந்திரிக்காவுக்கு அவர் மாமா முறையானவர். மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச, ரத்வத்த குடும்பத்தில் மணமுடிப்பதன் மூலம் ராஜபக்சவினர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் உறவினர்களாகி விடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரதுகண்டியகூறப்படுகிறதுகொள்ளசிங்களப்ஜனாதிபதிதீர்மானித்துள்ளதாகபெண்ணைமகிந்தவும்மனைவியானமருகளாக்கிக்மலைநாட்டுராஜபக்சவும்ஷிரந்தி
Comments (0)
Add Comment