அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகள்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியில்கறுப்பின சிறுவர்கள் மீது காவல்துறை அதிகாரி ஒருவர் மேற்கொண்ட தாக்குதல் காணொளி இணையத்தில் வெளியானதால்,இதற்கு காரணமான, போலீஸ் அதிகாரியின் வேலை பறிக்கப்பட்டுள்ளது.

மேலும் பணியில் இருந்து அகற்றப்பட்ட அக்காவல்துறை அதிகாரி இரண்டு கறுப்பின சிறுவர்களை நோக்கி துப்பாக்கியை நீட்டுவதும், சிறுமி ஒருவரின் கழுத்தை பிடித்து கீழே தள்ளி, அவரை அமுக்கி பிடிப்பதும் அவ்வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

மெக்கின்னி பகுதியின் காவல்துறை தலைவர் நடைபெற்ற இச்சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து டெக்ஸாஸ் மேயர்,

அமெரிக்காவின் பல பகுதிகளில் கருப்பின மக்கள் மீது காவல்துறையினர் மிருகத்தனமான தாக்குதல்களை நடத்துகின்றனர் எனும் பதற்றங்கள் மேலோங்கி வரும் நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

 தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் தனக்கு கவலையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று டெக்ஸாஸ் மேயர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காகருப்பின மக்கள்காணொளிகாவல்துறையினர்டெக்ஸாஸ் மேயர்தாக்குதல்
Comments (0)
Add Comment