அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவுத்துறை செயலருமான ஹிலாரி கிளிண்டன் நியூயார்கில் உள்ள ரூஸ்வெல்ட் தீவில் பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார்.
பிரச்சாரத்தை காண 5,500 பேர் திரண்டிருந்தனர்.
அவர்கள் முன்பு உரையாற்றிய ஹிலாரி கிளிண்டன்,
‘அமெரிக்கா நாட்டில் தான் ஒரு தந்தை தனது மகளிடம் நீ எப்படியிருக்க நினைக்கிறாயோ, அதைப்போலவே இருக்கலாம். ஏன் அமெரிக்க அதிபராக கூட ஆகலாம் என்று கூறமுடியும். நமது நாட்டின் அதிபராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்க வரலாற்றில் நாட்டின் இளவயது அதிபர் என்ற பெருமையும், பேரக்குழந்தை பெற்ற பாட்டி ஒருவர் அதிபர் ஆனார் என்ற பெருமையும் எனக்கு கிடைக்கும்’ என்று ஹிலாரி நகைச்சுவையாக பேசினார்.
அதிபர் தேர்தலுக்காக ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுபவர்களில் ஹிலாரி கிளிண்டன் முன்னிலையில் உள்ளபோதும், அக்கட்சியை சார்ந்த வெர்மாண்ட்டை சேர்ந்த பெர்னி சாண்டர்ஸ், முன்னாள் மேரிலாண்ட் கவர்னர் மார்ட்டின் ஓ மால்லே மற்றும் முன்னாள் ரோட் தீவு கவர்னர் லிங்கன் சாபி ஆகியோர் அவருக்கு போட்டியாளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.