அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரி சிறிலங்காவிற்குப் பயணம்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி வர்த்தகப் பிரதிநிதியான,  என்ற, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரியே கொழும்பு வரவுள்ளார்.

இவர், வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு உடன்பாடு தொடர்பான பேச்சுக்களை சிறிலங்கா அரசாங்கத்துடன் நடத்தவுள்ளார். அத்துடன், மேலும், வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்துவது குறித்தும், அவர் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தகவல் வெளியிட்டுள்ளார். சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் தொடர்ச்சியாக கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரிஅமெரிக்காஆசியாஇராஜாங்கசிறிலங்காதிணைக்களம்பயணம்பிரதிநிதிமத்தியமைக்கல்வர்த்தகம்
Comments (0)
Add Comment