அமெரிக்க தீர்மானம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் தாக்கல்

இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்காவின் தீர்மானம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் முறைப்படி தாக்கல் செய்யப்பட்டது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததால், ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்காவின் தீர்மானத்தை ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதர் கீத் ஹார்பர் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்படி தாக்கல் செய்தார்.

 அப்போது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய சீனா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, போலந்து, மோண்டிநீக்குரோ, கானா, மாசிடோனியா உள்ளிட்ட 25 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்தன.

 இதையடுத்து, தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. இதன்பின், தனது கருத்தை இந்தியா வெளிப்படுத்தியது.

அப்போது, பேசிய இந்தியாவிற்கான பிரதிநிதி, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், இலங்கை பன்மொழி, பல்வேறு இனங்களைக் கொண்ட நாடாக நீடிக்கவும் இந்தியா ஆதரவு தரும் என தெரிவித்தார்.

 மேலும், 13வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்தவும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா வலியுறுத்தியது.

 தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளபடி, வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டு, 18 மாதங்களுக்குப் பிறகு முழுமையான அறிக்கை தாக்கல் செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க தீர்மானம்அம்சங்கள்இலங்கைஐ.நா மனித உரிமை ஆணையம்கலப்பு நீதிமன்றம்போர்க்குற்றம்
Comments (0)
Add Comment