அமெரிக்க நாடாளுமன்றத்தில் எச்1 பி விசா மசோதா இன்று தாக்கல்

அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு வசதியாக வெளிநாட்டினருக்கு அந்த நாடு எச்1 பி விசாக்களை வழங்கி வருகிறது.

இந்த விசாக்கள் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடையே இந்த விசாக்களுக்கு நல்ல மவுசு உள்ளது.

2017–ம் நிதி ஆண்டுக்கான இந்த விசா விண்ணப்பங்களை அமெரிக்கா ஏப்ரல் 1–ந் தேதி முதல் ஏற்கத்தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எச்1 பி விசா மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்தியா உள்பட வெளிநாட்டு பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு குறைக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

 

அமெரிக்காஇந்தியாஎச்1 பி விசாகுடியுரிமைவேலைவாய்ப்பு
Comments (0)
Add Comment