அமெரிக்க பிரேரணையின் ‘கடும் தொனி’ குறைக்கப்பட்டது மகிழ்ச்சி, வாசுதேவ நாணயக்கார

அமெரிக்காவின் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணையின் கடுமையான தன்மை குறைக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கின்றது. இதற்கு இந்தியாவின் பங்களிப்பும் கிடைத்திருக்கலாம் எனத் தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, காலம் தாழ்த்தாது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முன்வர வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், சிறீலங்காவுக்கு எதிராக ஜெனீவாவில் கடுமையான தொனியுடன் அமெரிக்கா முன்வைக்கவிருந்த பிரேரணை இறுதி நேரத்தில் அதன் ‘கடும் தொனி’ குறைக்கப்பட்டு முன்வைக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதோடு இது மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.

அத்தோடு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு வருட கால அவகாசமும் கிடைத்துள்ளது.
இப்போதே சிறீலங்கா அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஆரம்பித்து விட்டது. எனவே, இனிவரும் ஒரு வருட காலத்தில் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தும் நிலைமை உருவாகும்’ எனக் குறிப்பட்டுள்ளார்.

அமெரிக்காதமிழ் தேசிய கூட்டமைப்புபிரேரணைவாசுதேவ நாணயக்கார
Comments (0)
Add Comment