அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரஷ்யா செல்லவுள்ளார்

போர்க்களமாக இருக்கும் சிரியாவில் இருந்து தனது படைகளை திரும்பப்பெற துவங்கியிருக்கிறது ரஷ்யா. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி வரும் 22-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ரஷ்யாவுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பயணத்தின் போது உக்ரைன் விவகாரம், மின்ஸ்க் ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், சிரியாவில் அரசியல் மாற்றத்தை கொண்டு வர எடுக்க வேண்டிய முடிவுகள், ஐ.எஸ். தீவிரவாதத்தை சிரியாவில் இருந்து முற்றிலுமாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆகியவை பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.   ஐ.நா. தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தை துவங்கவுள்ள நிலையில், கடந்த 15-ந்தேதி முதல் சிரியாவில் இருந்து ரஷ்யா தனது படைகளை திரும்பப்பெற ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து 6 ஆண்டுகளாக சிரியாவில் உள்நாட்டுப்போர் நிலவி வருவது நினைவு கூரத்தக்கது.

அமெரிக்காசிரியாபடைகள்போர்க்களம்மந்திரிமீளப்பெறல்ரஷயாவெளியுறவு
Comments (0)
Add Comment