அமெரிக்க வெள்ளை மாளிகையின் சுவர் ஏறி குதித்த மர்ம நபர்

அமெரிக்க வெள்ளை மாளிகையின் சுவர் ஏறி, மர்ம நபர் குதித்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், பலத்த பாதுகாப்பையும் மீறி, நேற்றுமுன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் சுவரேறி குதித்து உள்ளே நுழைந்த சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபரை கண்டதும், அவசர நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டு, வளாகத்திருந்து பெரும்பாலானோர் வெளியேற்றப்பட்டனர். மாளிகையிலிருந்து அதிபர் ஒபாமாவும் அவரது மனைவி மிச்சேல் ஒபாமாவும் புறப்பட்ட சமயம், மர்ம நபர் குதித்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “சுவர் ஏறி குதித்தவரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை. விசாரணையில் அவரது பெயர் உமர் ஜெ. கான்சாலேஸ் என்று தெரியவந்துள்ளது. எனினும் அவர் ஏன் அத்துமீறி நுழைந்தார் என்று தெரியவில்லை. தற்போது அவரை தீவிர மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி உள்ளோம்” என்றார்.

அங்குஅமெரிக்கஏறிஏற்பட்டதுகுதித்ததால்சுவர்நபர்பதற்றம்பெரும்மர்மமாளிகையின்வெள்ளை
Comments (0)
Add Comment