அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கார்பஸ் கிறிஸ்டி உள்ளிட்ட நகரங்கள் நீரில் மூழ்கின.
ஒரே நாளில் 28 சென்டி மீட்டர் மழை பெய்ததால், முக்கியச் சாலைகள் துண்டிக்கப்பட்டன. ஏராளமான கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மாநிலத்தின் முக்கியப் பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.