அமைச்சரவை கூட்டத்துக்கு சமுகமளிக்க முடியாது – சீவிவி

அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்குமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார். நாளை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்துக்கு வருமாறு விக்னேஸ்வரன் உள்ளிட்ட அனைத்து மாகாண முதலமைச்சர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.

எனினும் தாம் உள்ளுர் பணிகளை ஏற்கனவே குறித்த தினத்தில் ஒழுங்கு செய்துள்ளமையால் அதனை தவிர்க்க முடியாது என்ற காரணத்தினால் அமைச்சரவை கூட்டத்துக்கு சமுகமளிக்க முடியாது என்று விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

ஆளுநர் சந்திரசிறியின் பதவிக்காலம் முடிவடைந்ததும் அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமிப்பதில்லை என்று ஜனாதிபதி தமக்கு உறுதியளித்திருந்தார் என்றும், தற்போது அதனை அவர் மீறிவிட்டார் என்று விக்னேஸ்வரன் குற்றம்சுமத்தியிருந்த நிலையிலேயே அவருடைய அமைச்சரவை பகிஸ்கரிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அழைப்பைசீ.வி.ஜனாதிபதிநிராகரித்துள்ளார்மாகாணமுதலமைச்சர்வடக்குவிக்னேஸ்வரன்விடுத்த
Comments (0)
Add Comment