சிறந்த விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள், அமைதிக்காக பாடுபட்டவர்கள் போன்றவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அறிவியல், மருத்துவம் தொடர்பானவற்றில் சாதனை படைத்தவர்கள் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. இந்த பரிசுக்கு 376 பிரபலரங்களின் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு 278 பேர் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டு இருந்தன. இப்போது தான் இந்த அளவுக்கு மிக அதிகமான நபர்கள் பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
இதிலிருந்து ஒருவரை தேர்வு செய்வார்கள். ஈரானுடன் அணு அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்திய அமெரிக்காவின் ஜான் கெர்ரி, ஈரானின் ஜாவிர் ஷெரீப், ஐரோப்பிய யூனியன் வெளிவிவகார கொள்கை தலைவர் பெடர்சியா மொகரினி, ரஷியாவை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் செவத்லானா குன்னூஸ்கினா ஆகியோருடைய பெயர்களும் இதில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் சிலர் நாமினேஷன் பட்டியலில் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர் பரிசுக்குரிய நபர் தேர்வு செய்யப்படுவார்.