சகிப்புத்தன்மை குறித்த சர்ச்சை வலுத்துவரும் நிலையில், அரசியல் சாசன தினம் தொடர்பாக மக்களவையில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி இதனைத் தெரிவித்துள்ளார்.
வேற்றுமைகள் நிறைந்த இந்தியாவை அரசியல் சாசனமே ஒருங்கிணைப்பதாக பிரதமர் மோடி அப்போது குறிப்பிட்டார். நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்ட முந்தைய அரசுகளின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது என்றும் அவர் கூறினார்.
அரசியல் சாசனத்தை வடிவமைத்த அம்பேத்கரின் சிறப்புகளை நினைவு கூர்ந்த பிரதமர், அம்பேத்கரின் சிந்தனைகள் அனைத்துத் தலைமுறையினருக்கும் ஏற்றவை எனவும் புகழாரம் சூட்டினார்.
சொந்த வாழ்வில் பல கசப்புகளைச் சந்தித்திருந்த போதிலும்,தாம் உருவாக்கிய அரசியல் சாசனத்தில் அம்பேத்கர் அவற்றைப் பிரதிபலிக்கவில்லை என்றும் மோடி தெரிவி்த்தார்.ஜனநாயகம் நிலைத்திட, அரசியல் சாசனத்தை உறுதியுடன் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தமது உரையில் வலியுறுத்தினார்.