அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா

ஆசிய நாடுகளுக்கு பத்தாவது முறையாக அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வியட்நாம் மற்றும் ஜப்பான் நாட்டுக்கு இன்று புறப்பட்டுச் சென்றார்.  ஆசிய நாடுகளுக்கு பத்தாவது முறையாக அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வியட்நாம் மற்றும் ஜப்பான் நாட்டுக்கு இன்று புறப்பட்டுச் சென்றார்.  

அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து அதிபரின் சிறப்பு விமானம் மூலம் (உள்ளூர் நேரப்படி) இன்று பிற்பகல் 1.20 மணியளவில் வியட்நாம் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்ற ஒபாமா, அந்நாட்டின் தலைநகரான ஹனோய் நகரில் வியட்நாம் அதிபர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார்.

 சீனாவுடனான வியட்நாமின் கடல் எல்லை விவகாரம் மற்றும் வியட்நாமின்மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையை அகற்றுவது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தையின்போது முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. மேலும், சீனாவின் அச்சுறுத்தலை சந்திக்கும் வகையில் வியட்நாமுக்கு தேவையான ராணுவ உதவிகளை வழங்கவும் ஒபாமா ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியட்நாம் அரசால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என இந்த சந்திப்பின்போது ஒபாமா வலியுறுத்துவார் என தெரிகிறது. வியட்நாமின் பொருளாதார தலைநகரமான ஹோ சி மின் நகருக்கு செல்லும் ஒபாமா அங்கு பிரபல தொழிலதிபர்களின் கருத்தரங்கில் பங்கேற்கிறார்.  பின்னர், ஜப்பான் நாட்டுக்கு செல்லும் ஒபாமா, அங்கு அணுகுண்டு வீச்சால் தரைமட்டமான ஹிரோஷிமா நகரில் நடைபெறும் பொருளாதாரத்தில் வளர்ந்த ஏழுநாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஜி-7 எனப்படும் நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

இரண்டாம் உலகப்போரின்போது 1945-ம் ஆண்டு அந்நாள் அதிபர் ஹாரி ட்ருமேன் உத்தரவின்படி, ஜப்பானின் ஹிரோஷிமா நகரின்மீது அணுகுண்டு வீசப்பட்ட பின்னர், சுமார் அறுபது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஹிரோஷிமா நகருக்கு வரும் முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.  சுமார் ஒன்றரை லட்சம் உயிர்களை குடித்து பல லட்சம் பேரை ஊனப்படுத்தி, வரலாற்றின் கருப்பு ஏடாக வர்ணிக்கப்படும் ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சு சம்பவத்துக்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜப்பான் மக்கள் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால், அப்படி மன்னிப்பு கேட்க முடியாது என அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை மறுத்து வருகிறது, என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர்அமெரிக்காஅரசுமுறைஆசியாஒபாமாநாடுபயணம்பராக்
Comments (0)
Add Comment