அந்நாட்டின் பாராளுமன்ற மேல் சபை சட்டமூலமொன்றின் நிறைவேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டதையடுத்து பிரதமர் மல் கொம் டேர்ன்பல் உரிய தேர்தல் காலத்துக்கு பல மாதங்களுக்கு முன்னர் மேற்படி தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதன் பிரகாரம் அன்றைய தினம் பிரதமர் அந்நாட்டு ஆளுநர் நாயகம் பெருந்தகை பீற்றர் கொஸ்குரோவை பாராளுமன்ற கீழ் மற் றும் மேல் சபைகள் இரண்டையும் கலைக்கக் கோரியுள்ளார்.
அவுஸ்திரேலிய அரசியல் முறைமையின் பிரகாரம் நாட்டின் தலைவியான பிரித்தானிய எலிஸபெத் மகாராணியை பிரதிநிதித்துவம் செய்பவராக ஆளுநர் நாய கம் விளங்குகிறார்.
மேற்படி தேர்தலில் பொருளாதாரம், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற விடயங்கள் செல்வாக்குச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது
மேற்படி தேர்தலில் பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையின் அனைத்து 150 ஆசனங்களுக்கும் செனட்ச பையின் 76 ஆசனங்களுக்குமான தெரிவுகள் இடம்பெறவுள்ளன.