ஆப்கானிஸ்தான் நாட்டில் கிழக்கு நகரான ஜலலாபாத்தில் இன்று ராணுவத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட வீரர்கள் பேருந்து ஒன்றில் வந்து கொண்டிருந்தனர்.
இந்த பேருந்தை குறிவைத்து வெடிகுண்டுகளை உடலில் கட்டியபடி வந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன், பேருந்து மீது தனது மோட்டார் சைக்கிளை மோதச்செய்து வெடிக்கச்செய்தான். இந்த தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும், பேருந்தில் பயணம் செய்த 38 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் அதிகம் உள்ள இந்த மாகாணத்தில், அடிக்கடி தற்கொலைப்படை தாக்குதல்கள் நடந்து வருகின்றன என்பது கவனிக்கதக்கது.