தலைநகர் காபூலில் ரஷ்ய தூதரகம் அருகே சென்றுகொண்டிருந்த மினி பேருந்து மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில், மினி பேருந்தில் பயணித்த தொலைக்காட்சி நிறுவன ஊழியர்கள் 7 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
பயங்கரவாத தாக்குதலில் ரஷ்ய தூதரகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறிய அதிகாரிகள், தொலைக்காட்சி ஊழியர்களை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.