ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கும் மாளிகை அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதுலில் யாரும் உயிரிழந்ததாக இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இருப்பினும் அப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தாலிபன்கள் பொறுப்பேற்றுள்ளனர். தாக்குதல் தொடர்வதால் அங்கு கூடுதல் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளது. இது டிரக் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என கூறப்படுகிறது