அமெரிக்க புலனாய்வுத்துறை மற்றும் ஆப்பிள் நிறுவனத்துக்கு இடையேயான பிரச்னைகள் நீதிமன்றத்தை விட்டு விட்டு மக்கள் மன்றத்துக்கு வந்துள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் மொபைல் ஃபோனை அமெரிக்க புலனாய்வு அமைப்பினர் மீட்டுள்ளனர். ஆனால் அந்த ஃபோனில் உள்ள தகவல்களை அவர்களால் எடுக்க முடியவில்லை. ஃபோனை தயாரித்த ஆப்பிள் நிறுவனம் இதில் தங்களுக்கு உதவ வேண்டும் என புலனாய்வு அமைப்பினர் வைத்த கோரிக்கையை ஏற்க ஆப்பிள் நிறுவனம் மறுத்து விட்டது.
பொதுமக்களின் தனிப்பட்ட உரிமைகள் பாதிக்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்தது. இந்நிலையில், நீதிமன்றத்தை நாடிய புலனாய்வுத் துறைக்கு நீதிமன்றமும் உதவவில்லை. இதையடுத்து, புலனாய்வுத் துறை இயக்குநர், அமெரிக்க காங்கிரஸ் மற்றும் செனட் அவைக்கு இப்பிரச்சினையை எடுத்துச் சென்றுள்ளார்.