ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் திரும்பப் பெறப்பட்டது: திரிபுரா அமைச்சரவை ஒப்புதல்

18 ஆண்டுகளாக அமலில் இருந்த திரிபுரா மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை திரும்ப பெறுவது என அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

 திரிபுரா மாநில முதலமைச்சரும் உள்துறை அமைச்சருமான மாணிக் சர்கார இந்த அறிவிப்பு அரசிதழில் வெகுவிரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

 மேலும் அவர் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்ப பெற ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். வன்முறை மற்றும் படுகொலைகள் காரணமாக கடந்த 1997 ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி திரிபுராவில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் உருவாக்கப்பட்டு அமலுக்கு வந்தது. தற்போதைய திரிபுரா அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு மக்கள் போராட்டத்தின் பிரதிபலிப்பேயாகும். மக்கள் போராட்டத்திற்கும் இரோன் ஷர்மிலா அவர்களுடைய உண்ணாநிலைப் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றியாகவே இந்த அறிவிப்பு கருதப்படுகிறது.

அமைச்சரவைஆயுதப்படை சிறப்புச் சட்டம்இரோன் ஷர்மிலாஒப்புதல்திரிபுராமாணிக் சர்கார
Comments (0)
Add Comment